இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது – முரளிதரராவ்

எக்காரணம் கொண்டும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழகத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள  பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் இன்று வேலூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ”எந்த காரணத்தைக் கொண்டும், இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. அதேவேளை , இந்திய-இலங்கை பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்” எனவும் கூறினார்.

அகதிஇந்தியஇந்தியாஇலங்கைகுடியுரிமைசந்திப்புதமிழகம்தேசியபத்திரிக்கைபாஜகபிரச்சனைபொதுச்செயர்மீனவர்முரளிராவ்வழங்கல்வேலூர்
Comments (0)
Add Comment