இலங்கை அகதிகள் முகாமில் மர்ம நபர்கள் தாக்குதல்: பாதுகாப்பு கோரி ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்

புதுக்கோட்டை அருகே உள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் குடும்பஙகள் வசிதத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக முகாமில நள்ளிரவில் மர்ம நபர்கள் முகாமிற்குள் அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து முகாமில் உள்ளவர்களை தாக்குததல் நடத்தி வருவது தொடர்ந்து நடந்து வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் போலீசார் முகாமிற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கவில்லை என்று முகாமில்; உள்ளவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு முகாமில் மர்ம நபர்கள் அரிவாளுடன் உள்ளே நுழைந்து முகாம் தலைவர் கமலநாதன் உள்ளிட்ட 5 பேரை தாக்ககியுள்ளனர். இதில் 5 பேரும் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை கண்டித்தும் முகாமிற்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்ய வலியுறுத்தியும் முகாமில் 200க்கும் மேற்படட பொதுமக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகதிகள் முகாம்இலங்கைஉண்ணாவிரதம்தோப்புக்கொல்லைபுதுக்கோட்டை
Comments (0)
Add Comment