இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கை பாரதூரமானது – ஓ.பன்னீர்செல்வம்

இலங்கையில் கைது செய்யப்பட்ட 54 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள எழுத்துமூல கோரிக்கையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான கைதுகள் தொடரும் நிலையில், இருநாட்டு மீனவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றவை என்றும் பன்னீர்ச் செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு நாடுகளின் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வேளையில் இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கை பாரதூரமானது என்றும் பன்னீர்ச் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மீனவர் பிரச்சினை தொடர்பாக இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று நாளை சென்னையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியஇலங்கைஓ.பன்னீர்ச்செல்வம்கடற்படை கைதுதமிழகம்நடவடிக்கைபிரதமர்மீனவர்கள்முதல்வர்விடுதலை
Comments (0)
Add Comment