இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு, அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பலில் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரபிக் கடலில் குறித்த பயிற்சிகள் வழங்கபடுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சான்டியாகோவை தளமாக கொண்ட, வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பல்களான, USS Spruance மற்றும் USS Stockdale ஆகியன, கடந்த ஒக்ரோபர் மாமத்தில் இருந்து இந்தோ-பசுபிக் மற்றும் மத்திய கிழக்கில் பணிகளை மேற்கொண்டு , நேற்று முன்தினம் தளம் திரும்பியுள்ளன.
John C. Stennis விமானந்தாங்கி தாக்குதல் அணியில் இடம்பெற்றிருந்த இந்த நாசகாரி கப்பல்களில் ஒன்றான, USS Spruance தெற்கு அரபிக் கடலில் இலங்கை இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து, நீர்மூழ்கி எதிர்ப்பு போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததாக அமெரிக்க தகவல் கூறுகிறது.
இந்நிலையில் அமெரிக்க – இலங்கை கடற்படையினர் CARAT 2019 கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டிருந்த போதே, அரபிக் கடலில் இருதரப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்க கடற்படை கூறியுள்ளது.
இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கூட்டுப் பயிற்சிக்காக USS Spruance நாசகாரி போர்க்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கடந்த மாதம் 19ஆம் நாள் சென்றிருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.
எனினும், குறித்த விடயம் தொடர்பான விபரங்களை இலங்கை கடற்படையோ, அல்லது அமெரிக்க கடற்படையோ அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.