இலங்கை சிறையிலிருக்கும் மீனவர்களை விடிவிக்க கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்

வங்கக்கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். நாகை மாவட்டம் நம்பியார் நகரைச் சேர்ந்த சத்தியன் என்பவர் உட்பட 7 மீனவர்கள், விசைப்படகில் 27ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர்.

 கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்தபோது, எல்லைதாண்டி பருத்தித்துறை கடற்பரப்பில் நுழைந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதே நம்பியார் நகரைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர் ஏற்கனவே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 தற்போதைய கைது நடவடிக்கைமூலம், இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே இலங்கை கடற்படையைக் கண்டித்து நம்பியார் நகரைச் சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லப்போவதில்லை என அறிவித்துள்ளனர். நாளை தாலுகா அளவில் ஆலோசனை நடத்தப்பட்டு அடுத்தக்கட்ட போராட்டம் பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர்கோடியக்கரைசிறைபிடிப்புதமிழக மீனவர்கள்வேலைநிறுத்தம்
Comments (0)
Add Comment