ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தின் தொடர்ச்சியான போராட்டத்தினால் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
வடபிராந்திய இலங்கை போக்குவரத்துக் சபையின் நிர்வாத்தின் சீர்கேடுகளை கண்டித்தும், வடபிராந்திய முகாமயாளரை இடமாற்றம் செய்யவும் கோரி,
போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்ககள் நேற்றுமுன்தினம் பணிப் புறக்கணிப்பு பேராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இப் பணிப்புறக்கணிப்பினால் பயணிகள் பெரும் அவலங்களை எதிர்கொண்ட நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்தினால்,
வடபிராந்திய முகாமையாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.