இளங்கோவன் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு தாக்கல்!

சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ‘தனியார் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 30ந் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக ஆளுநர் ரோசையா, துணைவேந்தர் நியமனத்தில் பணம் பெற்றதாகவும், அவ்வாறு வாங்கிய தொகையில், ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, மீதியை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இது ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டாகும். வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவதூறான குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இதனால், முதல்-அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கிரிமின்ல அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இளங்கோவன்ஜெயலலிதாதனியார்தொலைகாட்சிநீதிமன்றம்வழக்குவிசாரணை
Comments (0)
Add Comment