இளம் குற்றவாளி விடுதலைக்கு டெல்லி மகளிர் ஆணையம் எதிர்ப்பு: நள்ளிரவில் மேல் முறையீடு!

நிர்பயா வழக்கில், இளம் குற்றவாளியை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் நள்ளிரவில் டெல்லி மகளிர் ஆணையம் மனு தாக்கல் செய்தது.

 இளம் குற்றவாளி இன்று விடுதலை செய்யப்படவுள்ள நிலையில், நள்ளிரவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூரின் வீட்டிற்கு சென்று, டெல்லி மகளிர் ஆணைய தலைவர் MALIWAL மனு தாக்கல் செய்தார். இதனை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் நீதிபதியிடம் முறையிட்டார்.

 ஆனால், அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்ட, தலைமை நீதிபதி தாக்கூர், மனுவை விடுமுறைக் கால அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். உடனடியாக விடுமுறைக் கால அமர்வு நீதிபதிகளான ஏ.கே.கோயல், யு.யு.லலித் வீட்டிற்கு நள்ளிரவு 2 மணிக்குச் சென்று MALIWAL முறையிட்டார்.

 இந்த மனுவை நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். தண்டனைக்காலம் முடிவடைந்து இன்று விடுவிக்கப்பட இருக்கும் இளம் குற்றவாளி, சிறுவர் சீர்திருத்தச் சிறையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இளம் குற்றவாளிடெல்லி மகளிர் ஆணையம் எதிர்ப்புநிர்பயா வழக்குவிடுதலை
Comments (0)
Add Comment