இளைஞர்களின் நாயகன் என காட்டிக்கொள்ள பிரயத்தனம் மேற்கொள்ளும் நாமல்

சிறைச்சாலைக்கு செல்வதனை வீரசெயல் எனவும், அங்கு சென்று வெளியே வரும் போது வீரனாக வரும் கலாச்சாரம் ஒன்றே தற்போது காண முடிகின்றது. கைகள் இரண்டிற்கும் விலங்கு போட்டவுடன் அதனை காட்டுவதற்கு வீரனை போன்று கைகளை மேலே தூக்குவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிதி முறைக்கேடு தொடர்பிலான குற்றச்சாட்டிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைக்கு சென்று வருகின்றார்.

எனினும் தனக்கு அரசியல் பழிவாங்கள் மேற்கொள்ளப்படுவதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். கடந்த மஹிந்த ஆட்சியில் நாமல் செயற்பட்ட முறையினை தற்போது மக்களுக்கு மறக்கடிப்பதற்கு நாமல் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் நாமல் ராஜபக்சவினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்பதனால் அவர் தொடர்பான கசப்பான நினைவுகளை மக்களால் மறக்க முடியவில்லை. அவர் தனது ஆதரவாளர்களை பயன்படுத்தி ஊடகங்கள் முன்னால் வீரனாகுவதற்கான விளம்பரங்களை முன்னெடுத்து வருகிறார். அதற்கான சில ஊடக நண்பர்களை தன்வசம் வைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

இவ்வாறான குற்றவாளிகளை வீரனாக்கும் ஊடகவியலாளர்கள் குறித்து வருத்தம் வெளியிடுவதாக அரசியல் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கைது செய்யப்படும் காட்சிகள் மற்றும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் காட்சிகளை நேரடியாக பேஸ்புக்கில் வெளியிட்டு தன்னை நியாயமான, இளைஞர்களின் நாயகன் என காட்டிக்கொள்ள பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார்.

ஊடகம்கலாச்சாரம்கைகள்சிறைச்சாலைநாமல்விலங்குவீரச்செயல்
Comments (0)
Add Comment