புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கர்நாடக அரசின் இந்த அணுகுமுறை, சட்டப்பேரவைக்கும், நீதிமன்றத்திற்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தும் என்றார்.
மேலும், தனது பிடிவாதப் போக்கை கர்நாடக அரசு கைவிட்டுவிட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய கடவுளை பிரார்த்திப்பதாகவும் கூறினார்.