உணவு வீண் விரயத்தைத் தடுக்க வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நகர்வலத்துடன் கையெழுத்திடும் ஊர்வலம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து இன்று காலை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் இதில் முதல் கையெழுத்திட்டு ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தார்.
ஊர்வலம் தொடர்ந்து 3 நாள்கள் இடம்பெறும் என்றும், ஏ9 வீதியூடாக ஓமந்தை , புளியங்குளம் , கனகராயன்குளம் , மாங்குளம் , முருகண்டி , இரணைமடு ஊடாக இன்று மாலை கிளிநொச்சி நகரத்தை இந்த நகர்வலம் சென்றடையும் எனவும் கூறப்படுகின்றது.
நாளையதினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு ஊர்வலம் ஆரம்பமாகி தொடர்ந்து ஏ9 வீதியூடாக பரந்தன், இயக்கச்சி , பளை , கொடிகாமம் , சாவகச்சேரி , கைதடி ஊடாக யாழ்ப்பாண மாவட்ட செயலத்தைச் சென்றடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஊர்வலம் ஆரம்பமாகி யாழ்.மத்திய பேரூந்து நிலையம் ,
நாச்சிமார் கோவிலடி , நல்லூர் , திருநெல்வெலி, மருதானர்மடம் , கோப்பாய், புத்தூர் , நெல்லியடி , மந்திகை ஊடாக பருத்தித்துறையை சென்றடையும்.
விண்மீன்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் ஊர்வலத்தில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , வர்த்தகர்கள் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.