கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் ஊழல்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறினால், உண்மைகளை வெளிப்படுத்த நேரிடும் என இரண்டு அமைச்சர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி பிரதமர் தலைமையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
வழக்குகளை தொடர்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.
அவசரப்படாமல் பொறுமையுடன் இருக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.