உபியில் இரு பிரிவினர் மோதிக்கொண்டதால் பெரும் வன்முறை

உ .பி., யில் ஷகரான்பூரில் இரு பிரிவினர் மோதிக்கொண்டதால் பெரும் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இது போல் மொரதாபாத்தில் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தனித்தனி போராட்டம் நடத்துவதால் இங்கும் அரசியல் பதட்டம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஷகரான்பூரில் நில பிரச்னை தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். வாகனங்கள், கடைகள் தீக்கிரையாகின. இரு பிரிவினரும் கல் வீசி தாக்கி கொண்டனர். சம்பவ இடத்தில் அதிவேக விரைவு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தினரை கலைத்தனர். இந்த வன்முறைக்கு 2 பேர் பலியாகி இருக்கின்றனர்.

இது போல் சமீபத்திய வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நொய்டாவில் பா.ஜ.,வினர் பேரணி நடத்துகின்றனர். இதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சியினர் அமைதி பேரணி நடத்த திட்டமிட்டனர். ஆனால் மொராதாபாத்தில் நுழையும் முன்னதாக காஸியாபாத் எல்லையில் காங்., மூத்த நிர்வாகி மதுசூதன் மிஸ்த்திரி, நடிகை நக்மா, உள்பட காங்., தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ராகுல் வேண்டுகோள் : அனைவரும் அமைதி காக்குமாறு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடைபெற்ற மோதல்களை அறிந்து வேதனைஅடைகிறேன். வன்முறை, பிரிவினைவாதம், வெறுப்பு போன்றவற்றுக்கு நமது நாட்டில் இடம் இல்லை. வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.மத உணர்வுகளைத் தூண்டி விடாமல் அமைதி காக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இருஉ .பி.எரிக்கப்பட்டன.தீ.பிரிவினர்பெரும்மோதிக்கொண்டதால்யில்வன்முறைவாகனங்கள்வெடித்தது.வைத்துஷகரான்பூரில்
Comments (0)
Add Comment