இதில் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு இலக்கியம் வகுத்த வாழ்வியல் என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்பம், துன்பம் நிறைந்தது தான் வாழ்க்கை. இன்பமாக வாழ திருவள்ளுவர் உள்பட பலர் பல நூல்களை வகுத்து கொடுத்துள்ளனர்.
இளமை, செல்வம் எப்போதும் நிலைத்திருக்காது, இதை வாழ்வின் அர்த்தங்களாக திருக்குறள் மிக தெளிவாக எடுத்துரைக்கிறது.
உண்மை மட்டுமே அழிவில்லாமல் நிலைத்திருக்கும், உண்மையும், இறைவனும் ஒன்று. உண்மையும், ஓழுக்கமும் ஒருவரிடம் இருந்தால் அரவது வாழ்வு சிறப்பு பெறும்.
தமிழில் உள்ள அனைத்து நூல்களையும் நீங்கள் படிக்க தேவையில்லை. புறநானூறு என்ற நூலையாவது புரட்டி பாருங்கள், தமிழ் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தை உணர்த்த அதில் உள்ள வரிகள் போதும். அதை படித்தால் நீங்கள் தமிழ் சமுதாயம் சார்ந்த வாழ்வை தொடுவீர்கள்.
தமிழ் மீதுள்ள மக்களின் ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. ஆங்கிலத்தை படியுங்கள், தமிழ் மொழியை புறக்கணித்து விடாதீர்கள்.
சென்னையில் 24 வயதுள்ள இளம்பெண் மக்கள் கூடியுள்ள இடத்தில் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். அந்த பெண் உயிருக்கு போராடிய நேரத்தில் உதவாத அங்கிருந்த மக்களின் மனித நேயம் எங்கு போனது என தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சங்க பொருளாளர் ராஜன், துணை செயலாளர் சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.