இனம்,மொழி,மண் காக்க வீழ்ந்தவர்களின் பெரும் புகழை விழாமல் காத்திட, தமிழரின் வரலாற்று அடையாளமாக பிரித்தானியா மண்ணில் உருவாகி இருக்கும் உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் கடந்த கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள்தொடர்பாக ‘’தமிழ் உறவுகளுடன் ஓர் இனிய கலந்துரையாடல்’’
எமது தாயக விடுதலைப் பாதையின் சுவடுகளையும்,வரலாற்றினையும் எமது எதிர்கால சந்ததியிடம் உரிய முறையில் கொண்டு செல்லும் பாரிய முயற்சியின் ஓர் அங்கமாக உருவாகியிருக்கும் வரலாற்று மையத்தின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வரலாற்று பொறுப்பும்,கடமையும் உங்களுக்கு உண்டு.அந்த வகையில் வரலாற்று மையத்தின் உரிமையாளர்களாகிய உங்களுடன் ஒரு வரலாற்று ரீதியான ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
இதில் தங்களை,தங்கள் குடும்பம் சகிதமாக கலந்து கொள்ளுமாறு அன்பு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி !
நிர்வாகம்
உலகத்தமிழர் வரலாற்று மையம்.
இடம் –
Mill House Farm,
Nell Bridge,Kings Sutton,
Banbury,
Oxon, OX17 3NX
நாள் – 04.09.2016, ஞாயிற்றுக்கிழமை,
நேரம் – 11.00 மணி