மைக்கல் ஜாக்சன் பாப் இசையின் மன்னர் என அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர் மைக்கல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜீன் 25-ம் தேதி உயிரிழந்தார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் அவரது தந்தை ஜோசப் ஜாக்சன் (89) தனிமையில் வசித்து வந்தார். இவரே ஜாக்சன் 5 பிரதர்ஸ் என்ற இசைக்குழுவை உருவாக்கி மைக்கெல் ஜாக்சனை இசை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
கடந்த பல ஆண்டுகளாக அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்ற நிலையில்,நேற்று மாலை அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.