தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செல்லவிருந்த ஹெலிகாப்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மைசூரு செல்ல முதலமைச்சர் சித்தராமையா, அமைச்சர்கள் மகாதேவப்பா, ஜார்ஜ் ஆகியோர் தனியார் ஹெலிகாப்டரில் ஏறினர். அதன் பைலட், ஹெலிகாப்டரை இயக்கிய போது, அதன் சைலன்சரில் இருந்து தீப்பொறிகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து உடனடியாக முதலமைச்சர் உள்ளிட்ட 3 பேரும் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கி விடப்பட்டனர். இந்த விபத்தில் முதலமைச்சர் சித்தராமையா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். பின்னர் முதலமைச்சர் உள்ளிட்ட மூவரும் சாலை வழியாக மைசூரு சென்றனர்.