தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 65 ஆவது பிறந்த நாள் விழா, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து விஜயகாந்த்துக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் நான்கு கட்சிகளும், நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை இணைந்து சந்திப்பது என முடிவெடுத்து ஏற்கெனவே அறிவித்திருக்கிறோம். அதற்கென, அந்தந்த மாவட்டங்களில் பூர்வாங்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எனவே, நாங்கள் தேர்தலைச் சந்திப்பது உறுதி என்றார்.
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து தேமுதிக நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் நான்கு கட்சிகளும் ஒருங்கிணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்போம் எனக் கூறினார்.