வடக்கின் மீனவர்கள் திர்கொள்ளும் நெருக்கடி தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் இரு நாள் பயணமாக நேற்று யாழ் வருகை தந்த அமைச் சர் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மீனர்களுடனான சந்திபின்போது மீனவர்கள் வைத்த பிரச்சணைக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இங்கு இவைத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
உள்ளூர் இழுவைப் படகுகள் அனைத்தும் எதிர் வரும் 25ம் திகதியுடன் தடை செய்யப்படும் . அதேவேளை கடலட்டைத் தொழிலினை முழுமையாக உடன் தடை செய்ய முடியாதபோதும் கரையில் இருந்து 5 கிலோ மீற்றர் தூரத்திற்குள் தொழில் புரிவது எதிர்காலத்திலும் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் அனுமதி சட்ட ரீதியாக இரத்துச் செய்யப்படும்.
வடக்கில் 12 இடங்களில் கடலட்டைத் தொழில் இடம்பெறுகின்றது. இவற்றின் உரிமையாளர்களில் ஒருவர் கூட சிங்களவர் கிடையாது. அனைத்தும் முஸ்லீம்களும் , தமிழர்களுமே உள்ளனர்.
இருப்பினும் கடலட்டைத் தொழில் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதனால் இந்தியாவில் இருந்து வரும் மீனவர்கள் கூட எமது பகுதிக்குள்ளேயே சட்டவிரோதமாக கடலட்டையினைப் பிடித்து எம்மவர்களிடமே விற்றுவிட்டும் செல்கின்றனர்.
இதன் காரணத்தினால் இத் தொழிலை இலங்கையிலும் தடை செய்வது தொடர்பில் ஆய்வு செய்யும் அதேவேளை இதற்காக முதல்கட்டமாக ஏற்றுமதியினைக் கட்டுப்படுத்த தீர்மாணித்துள்ளோம்.
அத்துடன் தற்காலிகமாக இரண்டு வருடத்திற்கு தடை செய்வது குறித்தும் ஆராயப்படுகின்றது.
வட பகுதி மீனவர்களின் மற்றுமோர் முக்கிய பிரச்சணையான தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் வடக்கின் 4 மாவட்ட அரச அதிபர்கள் தலமையில் இடம்பெற்ற கூட்டங்களின் சிபாரிசுகள் அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவற்றினை எதிர்வரும் 25ம் திகதி அமைச்சில் இடம்பெறும் கூட்டத்தில் ஆய்வு செய்து அதன் சிபாரிசுகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும்.
அதன் பின்பு இதற்கு ஓர் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதேபோன்ற இந்திய மீனவர்களின் அத்துமீறல் விடயத்தில் அவர்களிடம் இருந்து கைப்பற்றிய 130 படகுகளை மீள விடுவிக்காமல் தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளதோடு அவர்களின் வலைகளைக் கூட மீள வழங்கவில்லை. இவ்விடயத்தில் எமது மீனவர்களின் நலனையே நாம் முதன்மையாக கருதுகின்றோம். இந்திய மீனவர்கள் எமது வளத்தை சுறட்டுவதனை நான் நேரடியாகப் பார்வையிட்டுள்ளேன்.
இந்தியா மீனவர்கள் பிரச்சணை விடயத்தில் தமிழ்நாடு அரசியல் வாதிகளும் தலையிடுகின்றமையினால் நாம் கவனமாகவே உள்ளோம்.
இந்தியாவுடன் வெளியுறவு அமைச்சின் ஊடாக பேசியுள்ளோம். தொடர்ந்தும் பேசவுள்ளோம். இவ் விடயத்திற்கு விரைந்து தீர்வு கானுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதற்காக செப்ரெம்பர் இந்திய அமைச்சர்களுடன் பேசவுள்ளோம். அதனைத் தொடர்ந்து இந்தியாவின் மீனவர் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் இங்கு வரவுள்ளனர்.
வட பகுதி மீனவர்கள் கடலிற்குச் செல்லும் சமயம் இரு இயந்திரங்களை கொண்டு செல்ல அனுமதி கோரப்பட்டது. அந்த வகையில் படகில் மொத்தமாக 40 குதிரைவலுவிற்கும் குறைந்த இயந்திரே இருக்க முடியும் .
9.9 குதிரை வலுவினை உடைய இரு இயந்திரங்கள் கொண்டு செல்ல அனிமதிக்கப்படுகின்றது. கரைவலைத் தொழிலில் உழவு இயந்திரத்தினைப் பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்படுகின்றது.