ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் புலனாய்வு அதிகாரி கைது..

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட  காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்   இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வுப் பிரிவின் ஏழாவது பற்றாலியனின் கட்டளை அதிகாரியான லெப்.கேணல் ஏரந்த பீரிஸ் என்ற அதிகாரியே நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்கு   விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த அவர்  கைதுசெய்யப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்   இன்று கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிகபப்ட்டுள்ளது.

இதேவேளை, கடந்த-2010 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பலர்  கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்கைதுபிரகீத் எக்னெலிகொடபுலனாய்வு அதிகாரிகள்
Comments (0)
Add Comment