ஊழலை எதிர்த்து குரல் கொடுக்கும் சுப்ரமணியன் சுவாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் பாரதிய ஜனதா கட்சி, அதே ஊழலை எதிர்க்கும் தம் மீது நடவடிக்கை எடுப்பது ஏன் என அவர் வினவியுள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி, பொதுநல வழக்கு தொடரப்போவதாகவும் கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.