எட்டு வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் – அகிலவிராஜ் காரியவசம்..

எட்டு வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருணாகலில் நேற்றையதினம்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்  தெரிவித்துள்ளார்.

அதோடு கல்வித்துறை சார்ந்த நிர்வாக கட்டமைப்புக்களின் பெரும் பகுதிகளில் நிர்வாக ரீதியான சீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாடசாலை மட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்றும், அத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிடில் சர்வதேச ரீதியாக நிகழும் வளர்ச்சிக்கு ஈடிணையான வளர்ச்சியை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த முடியாது  எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள்இடமாற்றம்கல்விபாடசாலை
Comments (0)
Add Comment