எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற காங்கிரசுக்கு உரிமை உள்ளது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்

மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற காங்கிரசுக்கு உரிமை உள்ளது என அக்கட்சித் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். தேர்தலுக்கு முன்னரே கூட்டணி வைத்துக்கொண்டதை சுட்டிக்காட்டிய சோனியா காந்தி, தாங்கள் தனிப்பெரும் கட்சி என்றும் குறிப்பிட்டார்.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற மொத்த தொகுதிகளில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் காங்கிரஸ் கட்சி 10 சதவீதத்திற்கும் குறைவாகவே வெற்றி பெற்றிருப்பதால், அக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி அளிப்பது தொடர்பாக பாரதிய ஜனதா தலைமையிலான அரசு உத்தரவாதம் அளிக்கவில்லை. இதுகுறித்து மக்களவைத் தலைவர் எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்க வேண்டும் என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.

அக்கட்சித்அந்தஸ்தைப்உரிமைஉள்ளதுஎதிர்க்கட்சிஎனகாங்கிரசுக்குசோனியாகாந்திதலைவர்தெரிவித்துள்ளார்பெறமக்களவையில்
Comments (0)
Add Comment