எதிர்வரும் 21ம் திகதி ஆயிரத்து 200 ஏக்கருக்கும் அதிகமான காணியை இராணுவம் விடுவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்தவகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
அதோடு நாச்சிக்குடா, வேளாங்குளம், உடையார்கட்டுக்குளம் போன்ற பகுதிகளில் உள்ள காணிகளும் அரசாங்க அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தனியார் காணிகள் இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.