இந்துக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை எதிர்வரும் 6ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
மக்கள் சக்தி என்னும் தொனிப் பொருளில் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அராசங்கத்திற்கு எதிராக தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினால் குறித்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்தது.
இவ்வாறான ஓர் பின்னணியில் எதிர்வரும் 5ஆம் திகதி பாரியளவில் இந்த கூட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையிலான கட்சிகள் தீர்மானித்துள்ளன.
பெரும் எண்ணிக்கையிலான மக்களை கொழும்பிற்கு அழைத்து இந்தக் கூட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை தினத்திற்கு முதல் நாள் இந்துக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும், போக்குவரத்தில் ஈடுபடுவதற்கும் குறித்த போராட்டம் இடையூறாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.