எமது காணிகளை எம்மிடம் பெற்று தாருங்கள் வாழ வழியின்றி தவிக்கிறோம் –அம்பாள்புரம் மக்கள்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட அம்பாள்புரம் கிராம மக்கள் தமது காணிகளை மீளவும் தமக்கு தெரியாது வேறு நபர்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றம்சுமத்தியுள்ளனர்.

அந்த காணிகள் தவறான முறையில் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீளவும் தம்மிடம் பெற்றுதருமாறும் அவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட அம்பாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 252 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் 80 குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவருவதோடு 38 பேருக்கு வண்டியன்குளத்தின் கீழ் வயல் நிலங்கள் காணப்படுகிறது.

ஏனைய விவசாய குடும்பங்கள் வயல் நிலங்கள் இன்றி தமது வாழ்வாதாரத்துக்காக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்

இவர்களது துன்பநிலமைகளை கருத்தில் கொண்டு 1993 ம் ஆண்டு பொருண்மிய மேன்பாட்டு நிறுவனம் அந்த காலத்தில் இருந்த பிரதேச செயலாளர் ஊடாக பிரதேச செயலாளரால் 40  குடும்பங்களுக்கு தலா அரை ஏக்கர் வீதம் அம்பாள்புரம் மக்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் வயல்களை செய்கைபன்னி வந்தனர்

 நாட்டில் இடம்ப்பெற்ற யுத்தம் காரணமாக அனைத்து உடமைகளையும் இழந்து சென்ற மக்கள் மீள்குடியேறிய தற்போதைய காலத்தில் குறித்த காணியை மீள்குடியேற்றத்தின் பின் அயல் கிராமமான கொள்ளவிளாங்குளம் பகுதியில் நடமாடும் சேவை நடத்தி குறித்த காணிக்கு போமிட்வழங்கியுள்ளார்.

இதனால் ஏற்கனவே செய்கைபன்னிவந்த விவசாயிகள் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை உடனடியாக நிறுத்தி எமது வாழ்வாதாரத்துக்கு உதவுமாறு மக்கள் கோருகின்றனர்

அத்தோடு திட்டமிட்டு தாங்கள் மலையக மக்கள் என்பதால் பழிவாங்கப்படுவதாகவும் அம்பாள்புரம் என்ற அடையாளத்தை குறிக்கும் பெயர்பலகையை கூட திட்டமிட்டு காணி அபகரிப்புக்காக வேறு இடத்தி போட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் தமக்கான நிலத்தை பெற்று தந்துதவுமாறு சம்மந்தப்பட்ட அனைவரிடமும் அம்பாள்புரம் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

40  குடும்பம்அரை ஏக்கர்கொள்ளவிளாங்குளம்கோரிக்கைமுல்லைத்தீவு
Comments (0)
Add Comment