எமது பயணத்தை தடுக்க முடியாது: நாமல்

எமது குடும்ப உறுப்பினர்களை சிறையில் அடைப்பதனால் எமது பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.நல்லாட்சி அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முனைப்பு காட்டுவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எமது குடும்ப உறுப்பினர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் துன்புறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறை ஊடகப் பேச்சாளரின் கருத்துக்கள் தொடர்பில் மக்களுக்கு நம்பி;க்கை கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
எனினும் நீதிமன்றம் மீது எமக்கு பூரண நம்பிக்கையுண்டு என அவர் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் தண்டனை விதித்ததன் பின்னரே பிணை வழங்குவதா இல்லையா என்பதனை தீர்மானிக்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குடும்ப அரசியல்நாமல்மகிந்தயோசிதராஜபக்ச
Comments (0)
Add Comment