இந்த சிறையில் இருந்து மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் மாறுவேடத்தில் தப்பினார். அவர் நேரடியாக முதல்வர் ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று தமது ஆதரவை தெரிவித்தார். அத்துடன் தாம் கடத்தி வைக்கப்பட்டதாக காவல்துறை இயக்குநரிடம் எம்.எல்.ஏ. சரவணன் புகார் தெரிவித்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் கூவத்தூர் போலீசார் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சிலர் மீது ஆட்கடத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய சென்றுவிட்டார். இதனால் தற்போது கூவத்தூர் ரிசார்ட்டில் எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீஸ் ஐஜி செந்தாமரைக் கண்ணன் மற்றும் காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி ஆகியோர் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.