தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை, ஒருபோதும் கூட்ட மைப்பின் பிரதிநிதியாக ஏற் றுக்கொள்ளமாட்டோம் என சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏனெனில் சுமந்திரன் ஒட்டு மொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விம்பம் அல்ல என்றும்,அவர் ஒரு தனிமனிதரே என்றும் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார் .
அதோடு சுமந்திரனின் கருத்துக்களை நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களாகக் கூட ஏற்றுக்கொள்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் உயர்ந்த ஸ்தானத்திலேயே இருக்கிறதாகவும், கூட்டமைப்புக்கு என ஒரு புரிதல் இருக்கிறதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சுமந்திரன் அடுத்த முறை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் தான் நாடாளுமன்றுக்கு வருவார் எனவும், அதற்காகவே அவர் அச்சுறுத்தும் பாணியில் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் எஸ்.பி.திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
சுமந்திரன் தன்னை ஒரு வீரராகக் காட்டிக்கொண்டாலும் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாகவோ, வடக்கு மக்களின் பிரதிநிதியாகவோ அவரை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் வடக்குக்கு அல்ல, அநுராதபுரத்துக்குக் கூட செல்லாதவர்கள் தான் தற்போது வீரர்களாகத் தம்மைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.