எம்.ஜி.ஆர். சிலை மர்ம நபர்களால் சிதைக்கப்பட்டுள்ளது

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ராமானுஜபுரத்தில் எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர், சிலையை சேதப்படுத்தி சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அ.தி.மு.க. கிளைச் செயலாளர், தாமோதரன் சுங்குவார் சத்திரம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த முகுந்தன், நந்தன், குப்பன், கமல், முருகன், மணிபாரதி, சுரேஷ், தனசேகர் ஆகியோர் சிலையை உடைத்தது தெரிந்தது.

முகுந்தன், நந்தனை போலீசார் கைது செய்தனர். மற்ற 6 பேரும் தலைமறைவாகி விட்டனர். அசம்பாவிதத்தை தடுக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில்இதனால்ஏற்பட்டதுசிலர்சிலையைசென்றுசேதப்படுத்திநபர்கள்பரபரப்புமர்மவிட்டனர்.
Comments (0)
Add Comment