எரிவாயு குழாய் குண்டுவைத்து தகர்ப்பு….

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், எரிவாயு குழாய் குண்டுவைத்து தகர்க்கப்பட்டதற்கு, சுதந்திரம் கோரி போராடி வரும் “பலூச் சுதந்திர புலிகள்”  அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில், தேரா பக்தியில், எரிவாயு தொழிற்சாலையில் இருந்து செல்லும் எரிவாயு குழாய் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

இதில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர்  உயிரிழந்ததோடு   2 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, அங்கு சுதந்திரம் கோரி போராடி வரும் “பலூச் சுதந்திர புலிகள்” என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

பலூசிஸ்தானின் வளங்களை கொள்ளையடித்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு, அந்நாட்டு அரசு பயன்படுத்துவதாக பலூச் சுதந்திர புலிகள் அமைப்பு குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

செண்பகம்பலூச் சுதந்திர புலிகள்பாகிஸ்தான்
Comments (0)
Add Comment