எல்லை நிர்ணயப்பணிகள் முடிவடைந்த பின்னரே தேர்தல் – முஸ்தபா

எல்லை நிர்ணயத்தைப் பற்றி அனைவரும் பல்வேறு விதமாக பேசுகின்றார்கள், தேர்தல் நடக்கவில்லை என குற்றம் சுமத்துகின்றார்கள், யார் என்ன சொன்னலும் எல்லை நிர்ணயப்பணிகள் முடிவடைந்த பின்னரே தேர்தல் நடைபெறும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தற்போது எல்லை நிர்ணயக் குழு தமது பணிகளை துரித கதியில் மேற்கொண்டு வருகின்றது. இருந்தும் இதுவரை 9 மாவட்டங்களின் நிர்ணயப்பணிகள்தான் முடிவடைந்துள்ளன. எஞ்சிய மாவட்டங்களின் எல்லை நிர்ணயப்பணிகள் அடுத்த வருடத்தில் தான் பூர்த்தியாகும். ஆகவே அடுத்த வருடம் தான் தேர்தல் நடாத்தப்படும் எனவும் கூறினார்.

மேலும், 32 வருடமாக சேமித்து வைக்கப்பட்ட குப்பைகளே மீதொட்ட பகுதியில் இருக்கின்றது. உள்ளூராட்சி சபையில் பணியாற்றும் ஊழியர்களின் உதவியுடனும், தங்களுடைய அமைச்சின் கீழும் குறித்த பகுதியிலுள்ள குப்பையை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

உள்ளூராட்சிஎல்லைகுற்றம்சைபர்முஸ்தபாதேர்தல்நிர்ணயம்பணி
Comments (0)
Add Comment