புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் அறிக்கையை முழுமையாக மறுக்கின்றேன் என புனர்வாழ்வு மறுசீரமைப்பு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எந்த தரப்பு இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தாலும் அது தவறானது.
குற்றச்சாட்டை முன்வைக்கும் யாராவது முடியுமானால், அதனை நிரூபிக்குமாறு நான் சவால் விடுக்கின்றேன் எனவும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். வடக்கு மாகாண சபையோ அல்லது வேறு ஒருவரோ முன்வைக்கும் இந்த குற்றச்சாட்டினால், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களே பாதிக்கப்படப் போகின்றார்கள். அரசாங்கத்தின் செயற்திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் புனவாழ்வளிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இந்த குற்றச்சாட்டினால் அநீதியிழைக்கப்படப் போகின்றனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பான தகவலைத் திரட்டிக் கொள்வதற்கே வட மாகாண சபையில் இந்தப் பிரச்சினை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.