எழிலக கட்டடத்தின் முதல் மாடியில் தீவிபத்து

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலக கட்டடத்தின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் பல்வேறு அரசுத்துறைகள் இயங்கி வருகிறது. 4 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தின் முதல் மாடியில் வேளாண்மைத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வேளாண்மைத்துறை அலுவலகம் உள்ள முதல் மாடியில் உள்ள அறையில் மரச்சாமான்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த அறையில் இருந்து இன்று பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளஎழிலகஏற்பட்டதுகட்டடத்தின்சென்னைசேப்பாக்கத்தில்தீ.மாடியில்முதல்விபத்து
Comments (0)
Add Comment