தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில் (வ.எண்.82601), அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதி இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக, நெல்லை-சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரெயில் (82602), அடுத்த மாதம் 15-ந்தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் அதிவிரைவு சுவிதா சிறப்பு ரெயில் (82621), சென்னை சென்டிரலில் இருந்து அடுத்த மாதம் 12-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கமாக, எர்ணாகுளம்- சென்னை சென்டிரல் அதிவிரைவு சுவிதா சிறப்பு ரெயில் (82622), அடுத்த மாதம் 15-ந்தேதி எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்டிரல் வந்து சேரும். இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.