எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு சிறந்த திரைக் கலைஞர் விருது!

திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு சிறந்த திரைக் கலைஞர் விருது வழங்கப்பட உள்ளது.

சர்வதேச திரைப்பட விழாவிற்கான போஸ்டர் மற்றும் டிரைலர் இன்று புது தில்லியில் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, சிறந்த திரைக் கலைஞர் விருது திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு வழங்கப்பட உள்ளது.

விரைவில் நடைபெற உள்ள 47வது சர்வதேச திரைப்பட விழாவில் இவ்விருது வழங்கப்படும் என்று கூறினார்.

சர்வதேச திரைப்பட விழாவில் மொத்தம் 1,032 திரைப்படங்கள் திரையிடப்படும். 1,032 திரைப்படங்களில் 88 நாடுகளைச் சேர்ந்த 192 திரைப்படங்கள் விழாவில் தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ், ஹிந்தி என 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எஸ்.பி.பி. பாடியுள்ளார்.  பத்ம பூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு சிறந்த திரைக் கலைஞருக்கான விருதினை இசையமைப்பாளர் இளையராஜா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்பி பாலசுப்ரமணியம்சர்வதேச திரைப்பட விழாசிறந்த திரைக் கலைஞர்திரைப்பட பாடகர்விருது
Comments (0)
Add Comment