ஏமானில் உள்ள இந்தியர்களை உடனடியாக அழைக்கின்றது இந்திய வெளியுறவுத்துறை

ஏமன் நாட்டில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக தாயகம் திரும்‌ப வேண்டும் என்று, இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன், ஏமன் நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருப்பது பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏமனில், மூவாயிரம் முதல் மூவாயிரத்து 500 இந்தியர்கள் இருப்பதாகவும், இவர்கள் பெரும்பாலும் செவிலியர்களாக பணியாற்றுபவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு திரும்புமாறு இவர்களுக்கு இத்துடன் 3 முறை அறிவுறுத்தியிருப்பதாகவும், அரசின் அறிவுறுத்தலை உணர்ந்து விரைவில் நாடு திரும்புவார்கள் என நம்புவதாகவும் சையத் அக்பருதீன் கூறியுள்ளார்.

அறிவுறுத்தல்இந்தியார்ஏமான்செவிலியர்சையத்டெல்லிதாக்குதல்தாயகம்துறைநாடுபாதுகாப்புவெளியுறவு
Comments (0)
Add Comment