மட்டக்களப்பு- ஏறாவூா் வெற்றுக் காணி ஒன்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதன்போது குறித்த காணியில் இருந்து கைக்குண்டுகள்-2, பெரிய கத்தி, ரீ-56 ரக தன்னியக்க துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் மெகசின்கள்-6 மற்றும் ரவைகள் 365 என்பன மீட்கப்பட்டன.
இந்நிலையில் மட்டக்களப்பு இராணுவ குண்டு செயலழப்பு பிரிவினரால் கைக்குண்டுகள் வெடிக்கவைத்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதோடு,
துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பொருள்கள் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.