ஏலியன் தென்பட்டதால் நேரலை வீடியோவை நிறுத்திய நாசா!

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சிகளில் உலகளவில் முன்னோடியாக இருக்கும் அமைப்புகளில் ஒன்றாக செயல்பட்டு வருகின்றது. இது விண்வெளியில் இருந்து பூமியின் காட்சியை வீடியோ வடிவில் இணையதளத்தில் அவ்வப்போது நேரலையாக வழங்கி வருகின்றது.

இந்நிலையில், ஜூலை 9ம் தேதி விண்வெளி நிலையத்திலிருந்து பதிவு செய்யும் பூமியின் காட்சியை நேரலை செய்தது. அப்போது, அந்த வீடியோவில் ஒரு மர்மமான பொருள் மிதப்பதை அறிந்த நாசா சில நொடிகளில் நேரலையை நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வேற்று கிரகவாசிகள் பற்றிய ஈடுபாடு கொண்ட பலர், அந்த வீடியோவில் காணப்பட்டது ஏலியன் அல்லது வேற்று கிரக பொருளாக இருக்கலாம் என்றும், ஏலியன் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக நாசா வேண்டுமென்றே நேரலையை நிறுத்தியதாகவும், இந்த செயலுக்கு நாசா விளக்கம் தர வேண்டும் என்றும் கூறி வந்தனர். இது மற்றொரு செயற்கை கோளாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த நாசா, சிக்னல் கோளாறால் நேரலை தடைப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.

மேலும் இந்த சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் வகையில் நாசாவின் செய்தி தொடர்பாளார் ஒருவர் கூறுகையில், ‘விண்வெளியில் நாசா அமைத்துள்ள விண்வெளி ஆராய்ச்சி கூடத்திலிருந்து இது போன்ற வீடியோ காட்சிகள் நேரலை செய்யப்படுகிறது. உயர்தர வீடியோ காட்சிகளை பதிவு செய்யும் நான்கு கேமராக்கள் இந்த வேலையை செய்யும். நான்கு கேமராவும் வெவ்வேறு திசைகளில் பதிவு செய்த காட்சியை தானாக தொகுத்து நேரலையாக வரும். இதில் ஏற்பட்ட சிக்னல் கோளாறால் தான் நேரலை தடைப்பட்டது, வேறு எந்த நோக்கமும் இல்லை’ என்றார்.

இதுபோன்று நாசாவின் மேலும் சில நேரலைகள் பாதியிலேயே தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அராய்ச்சிஏலியன்நாசாபூமிவிண்வெளிவீடியோ
Comments (0)
Add Comment