சிரியாவில் 2 துருக்கிய வீரர்கலை உயிரோடு எரித்து கொல்ல காரணமாக இருத்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் முதன்மை தலைவர் அபு தல்ஹா அல் துர்க்கி(Abu Talha al Turki) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் சிரியாவில் இரு துருக்கிய வீரர்களை உயிரோடு எரித்த வீடியோ பயங்கரவாதிகளால் வெளியிடப்பட்டது.
சிரிய பாதுகாப்பு படைகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐஎஸ் ஐஎஸ் நிறுவனத்தின் தலைவரான அபு தல்ஹா அல் துர்க்கியை சுட்டுக்கொன்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொல்லப்பட்ட ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதத்தின் தலைவர் தலைக்கு 2 லட்சத்து 43 ஆயிரம் பவுண்டுகள் இனமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.