ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தின் உண்மையான தலைவா் எம்.ஏ.சுமந்திரனே- உதய கம்மன்பில..

ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தின் உண்மையான தலைவா்  கூட்டமைப்பின்  எம்.ஏ.சுமந்திரனே என  நாடாளுமன்ற உறுப்பினா் உதய கம்மன்பிலதெரிவித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் இதனை கூறியுள்ளார்.

சமஷ்டிக்கு அப்பால் சென்ற அரசியலமைப்பு சட்டம் கொண்டு வரப்படும் என சுமந்திரன் வடக்கில்  இடம்பெற்ற  கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு  சுமந்திரன் கூறியது போல், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்தால், மாகாண சபைகளில் தலையீடு செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆளுநர்களுக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்றும், இதன் காரணமாகவே புதிய அரசியலமைப்பச்சட்டத்தை சமஷ்டிக்கும் அப்பால் சென்ற அரசியலமைப்பு என சுமந்திரன் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும்  உதய கம்மன்பில  கூறியுள்ளார்.

அரசியலமைப்புஉதய கம்மன்பிலஐக்கியதேசிய முன்னணிசுமந்திரன்பிவித்துரு ஹெல உறுமய கட்சி
Comments (0)
Add Comment