ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக, தமிழ் முற்போக்கு கூட்டணி எச்சரிக்கை…

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுக்கு இணங்காவிடின், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி எச்சரித்துள்ளது.

தோட்டத்தொழிலாளர்களுக்கான ஊதியத்தை குறைந்தபட்சம் 150 ரூபாவினால் அதிகரிக்காவிடின், அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் என,  அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தமது நிலைப்பாட்டை  ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குத் தெரியப்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்,

இந்நிலையில் அவர் உங்களையும்,  அமைச்சர்கள் நவீன் திசநாயக்க மற்றும் ரவீந்திர சமரவீர ஆகியோரையும்  சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் அமைச்சர் பழனி திகாம்பரம்  கூறியுள்ளார்.

குறித்த சந்திப்பு நாளை நடக்கவுள்ளதாகவும்,  பிரதமருடனான  இந்த சந்திப்பின் பின்னர் தமது முடிவை எடுப்போம்  தாம் எடுக்க உள்ளதாகவும் அவ்ர் தெரிவித்துள்ளார்.

தோட்டத்த தொழிலாளர்களிற்கான சரியான தீர்வு கிடைக்காவிட்டால் அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் பழனி திகாம்பரம்  கூறியுள்ளார்.

இதேவேளை ஏற்கனவே, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் நிலையில்,  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இந்த எச்சரிக்கை, ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம்தமிழ் முற்போக்குக் கூட்டணிதோட்டத்தொழிலாளர்கள்விலகல்
Comments (0)
Add Comment