ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71ஆவது அமர்வில், ஜனாதிபதி மைத்திரி

நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71ஆவது அமர்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உரையாற்றவுள்ளார்.  

தனது உரையில் இலங்கையின் எதிர்கால திட்டங்கள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி எடுத்துரைக்கவுள்ளார்.  ஐ.நா பொதுச்சபை அமர்வு நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், நேற்றைய தினம் அவுஸ்திரேலிய பிரதமர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடியிருந்தார்.

இதேவேளை ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகியோருடனும் ஜனாதிபதி சந்திப்புக்களின் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஐ.நா பொதுச்சபை அமர்வில் மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் இது இரண்டாவது சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமர்வுஇலங்கைஉரைஎதிர்காலம்ஐக்கிய நாடுகள்சபைஜனாதிபதிதிட்டம்நல்லிணக்கம்மைத்திரி
Comments (0)
Add Comment