ஐந்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிர்ப்பு

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தினுாடாக அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாது காலம் கடத்துவதற்கு முன்னெடுத்து வரும் முயற்சிகளை முறியடிப்பதற்கு தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புக்கள் ஐந்து கூட்டிணைந்து நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளன.

பெப்ரல், கெபே, தேர்தல் மோசடிகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம், டிரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல் மற்றும் இலங்கை மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் என்பன இணைந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளன.

இது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (22) தெமட்டகொடயில் நடைபெற்றது

அரசாங்கத்துக்குஎதிர்ப்புஒன்றிணைந்துகண்காணிப்பு அமைப்புக்கள்
Comments (0)
Add Comment