ஐபிஎஸ் அதிகாரி மர்மமான முறையில் மரணம்

சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.  கர்நாடகாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஹரிஸ், அண்மையில் மதுரையிலிருந்து சென்னைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை உதவி கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த இவர், இன்று காலை எழும்பூரில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான உணவு விடுதியில் இறந்த நிலையில் கிடந்தார்.   பதவி உயர்வு வழங்காததால் மன அழுத்தம் ஏற்பட்டு, அவர் அதிகளவில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த மர்ம மரணம் தொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

அதிகாரிஉயிரிழப்புஐபிஎஸ்சந்தேகம்சென்னைமர்மம்
Comments (0)
Add Comment