ஐப்தி நடவடிக்கையை கைவிட கோரி விவசாயிகள் போராட்டம்

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு  எதிரான ஐப்தி நடவடிக்கையை கைவிட தேர்தல் ஆணையம் உத்தரவிடகோரி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் விடியவிடிய நடைபெற்றது.  

தஞ்சை மாவட்டம் சோழகன்குடிகாடு விவசாயி பாலன் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து பணிநீக்கம் செய்ய வேண்டும் கோட்டக் மஹேந்திரா வங்கியை இழுத்து மூடவேண்டும் பாதிக்கப்பட்;ட விவசாயிக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டக் மஹேந்திரா வங்கியை முற்றுகையிட்டு இழுத்து மூடி பூட்டு போட்ட விவசாயிகள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இந்த போராட்டம் நள்ளிரவிலும் நீடித்தது.  அரியலூர் மாவட்டத்தில் டிராக்டர் ஜப்தியால் விவசாயி அழகர் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டிய போராட்டக் குழுவினர்  தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு எதிரான ஜப்தி நடடிக்கையை கைவிட தேர்தல் ஆணையம் உத்தரவிடும் வரை  காத்திருப்பு போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

அலுவலகம்ஆணையம்ஐப்திதஞ்சைதமிழகம்தேர்தல்நடவடிக்கைமாவட்டம்விவசாயிகள்
Comments (0)
Add Comment