அட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
“அட்சயா” எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது.
இந்த நாளில் தங்கம் மட்டுமல்ல நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கினாலும் செல்வம் பெருகும்.
கல் உப்பு, பச்சரிசி, மஞ்சள், ஆடைகள் வாங்கலாம். குரு,சுக்கிர ஓரைகளில் தங்கம்,வெள்ளி,பிளாட்டினம் வாங்கலாம்.
சித்திரைமாத அமாவாசைக்குப் பின்னர் வருகிற திருதியை திதியையே ‘அட்சய திருதியை’ என்றும் அழைக்கிறோம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை இன்று 07 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
அட்சய திருதியை நாளில் செல்வ வளம் பெருகி சிறப்பாக வாழ மங்களப் பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்குவது நல்லது.
ஆலயங்களில் ஏலம் போடும் பொழுது அதிக விலை கொடுத்து உப்பு வாங்குவார்கள். ஏனெனில் உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை.
அதோடு மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி, எழுதுகோல், இலட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வாங்கலாம்.