இந்தநிலையில் டெல்லி ஜந்தர்மந்தரில் ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பு சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சித்தொண்டர்கள் கலந்து கொண்டு, ‘அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது’ என்று கூறி கோஷமிட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி மூத்த தலைவர் அசுதோஷ், பிரதமர் மோடியை விமர்சிப்பதற்கு மாணவர் அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.