ஐ.தே.கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருக்கு நீதிமன்றம் பிடியாணை..

ஐக்கிய தேசியக் கட்சி யாழ் மாவட்ட அமைப்பாளர் துவாரகேஸ்வரனுக்கு ஊர்காவற்துறை நீதி மன்றினால் பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  பிடியாணை ஊர்காவற்துறை நீதி மன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காரைநகர்  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமார் மீது போலியான, பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக பதிவிட்டமை தொடர்பாக  துவாரகேஸ்வரன் மீது  அவதூறு வழக்கு பதிவு செய்யப் பட்டது.

இதனையடுத்து   துவாரகேஸ்வரனுக்கு ஊர்காவற்துறை நீதி மன்றத்தால் அழைப்பாணை விடுக்கப் பட்ட நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது..

இந்நிலையில் துவாரகேஸ்வரன் நீதி மன்றத்திற்கு சமூகம் அளிக்காத நிலையில்  ஊர்காவற்துறை நீதிமன்ற  நீதிபதி  கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும்  அவரை உடனடியாக கைது செய்து நீதி மன்றில் முன்னிலை படுத்துமாறும்  பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சிதுவாரகேஸ்வரன்மாவட்ட அமைப்பாளர்யாழ்
Comments (0)
Add Comment