ஐ.நா அறிக்கையாளர்கள் இருவர் இலங்கை வருகின்றனர்!

ஐக்­கிய நாடுகள் சபையின் இரண்டு விசேட அறிக்கை­யாளர்கள் எதிர்­வரும் 29 ஆம் திகதி இலங்கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்­ளனர். சுயா­தீன நீதி­ப­திகள் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் மொனிக்கா பின்­டோவும் சித்­தி­ர­வ­தைகள், மனி­தா­பி­மா­ன­மற்ற செயற்­பா­டுகள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் ஜுவான் மென்­டே­ஸுமே இலங்­கைக்கு இம் மாதம் 29 ஆம் திகதி விஜயம் செய்­கின்­றனர்.
மே மாதம் ஏழாம் திகதி வரை இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் இந்த இரண்டு ஐ.நா. விசேட அறிக்­கை­யா­ளர்­களும் இலங்­கையின் நீதித்­துறை மற்றும் மனித உரி­மைகள் தொடர்பில் மதிப்­பீ­டு­களை செய்­ய­வுள்­ளனர்.
குறிப்­பாக சுயா­தீன நீதித்­துறை, நீதி­தி­து­றையின் தொழில்சார் தன்மை நாட்டின் சட்ட கட்­ட­மைப்பு ஆகி­யவை தொடர்பில் மதிப்­பீ­டு­களை செய்­ய­வுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் இரண்டு அறிக்­கை­யா­ளர்­களும் ஐ.நா. மனித உரிமைப் பேர­வைக்கு பரிந்­து­ரை­களை முன்­வைக்­க­வுள்­ளனர்.
அத்­துடன் நீதித்­து­றையின் சுயா­தீன தன்மை மற்றும் பக்­க­சார்­பற்ற தன்மை தொடர்­பா­கவும் அவற்றின் மீதான மீறல்கள் குறித்தும் ஐ.நா.வின் இரண்டு அறிக்­கை­யா­ளர்­களும் அவ­தானம் செலுத்­த­வுள்­ளனர்.
அது­மட்­டு­மன்றி இலங்­கையின் நீதித்­துறை கட்­ட­மைப்­புக்கு தொழில்­நுட்ப உத­வி­களை வழங்­கு­வது தொடர்­பிலும் ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யா­ளர்கள் கவனம் செலுத்­த­வுள்­ளனர்.
இது இவ்­வா­றி­ருக்க இலங்­கையின் விஜ­யத்தை முடித்துக் கொண்ட பின்னர் சுயா­தீன நீதி­ப­திகள் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள் தொடர்­பான விடேச அறிக்­கை­யாளர் மொனிக்கா பின்டோ, சித்­தி­ர­வ­தைகள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஜுவான் மென்டேஸ் ஆகியோர் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.

அறிக்கையாளர்கள்இலங்கைஐ.நாநீதித்துறைமனிதவுரிமைகள்விசாரணைவிஜயம்
Comments (0)
Add Comment